சிங்கள கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதை கண்டித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மீனவ மக்கள் பேரவை, தமிழ்நாடு புதுவை கடலோர மக்கள் பாதுகாப்பு இயக்கம், தென் இந்திய மீனவ நலச்சங்கம் ஆகிய அமைப்புகளைச் சார்ந்த ஏராளமான பேர் டி.ஜி.பி. அலுவலகத்தில் கூடினார்கள்.
பின்னர் அந்த அமைப்புகள் சார்பில் டி.ஜி.பி. அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
அந்த கோரிக்கை மனுவில், சிங்களகடற்படை தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தமிழக மீனவர்களுக்கு அரசு துப்பாக்கி வழங்க வேண்டும், உரிய லைசென்சும் வழங்கி, மீனவர்களுக்கு உரிய துப்பாக்கி சுடும் பயிற்சியும் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. *
